மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாரிசு சான்றிதழ் வழங்க கையூட்டு.. வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்.. சபாஷ் சரியான சம்பவம்.!
வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் பகுதியில் அழகுராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது தாயார் ராஜம்மாள் இழந்ததனால், வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், அவருக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்காமல் வட்டாட்சியர் மைதீன் ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களது அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாயை வட்டாட்சியருக்கு அழகுராஜ் அளித்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வட்டாட்சியரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் லஞ்சம் வாங்குவது மிகவும் அற்பத்தனமான ஒன்றாகும் எனவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து லஞ்சம் வாங்கியது யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.