#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியுடன் சென்று கள்ளக்காதலியை அட்டாக் செய்த கணவன்... கடைசியில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்.!!
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளக்காதலியை பார்க்க மனைவியுடன் சென்ற நபர் தனது காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார். இதனையடுத்து குற்றவாளியை மீட்ட காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மனைவியின் தோழியுடன் கள்ளக்காதல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஜா. இவருக்கு திருமணம் ஆகி நாகராஜ்(37) என்ற கணவர் இருக்கிறார். சிந்துஜா மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மோகன் என்பவரது மனைவியான மகாலட்சுமியும் நெருங்கிய தோழிகள். மேலும் மகாலட்சுமி சிந்துஜாவை பார்ப்பதற்காக அடிக்கடி மண்ணச்சநல்லூர் சென்று வந்திருக்கிறார். அப்போது அவருக்கும் சிந்துஜாவின் கணவரான நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
மகாலட்சுமிக்கு வேறொரு நபருடன் தொடர்பு
நாகராஜ் மற்றும் மகாலட்சுமி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக மகாலட்சுமி நாகராஜுடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார். மேலும் மகாலட்சுமி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தது நாகராஜிற்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அவர் மகாலட்சுமியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு மகாலட்சுமியை சந்திக்க முடிவு செய்து இருக்கிறார் நாகராஜ் .
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையால் விரக்தி; இரயில் முன் பாய்ந்து இளைஞர் மரணம்?.. சடலமாக மீட்கப்பட்ட உடல்.!
கள்ள காதலிக்கு கத்தி குத்து
சிந்துஜா மற்றும் நாகராஜ் இருவரும் பெரம்பலூர் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மகாலட்சுமியை காண்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று இருக்கின்றனர். அப்போது சிந்துஜாவை தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து பூ எடுத்து வருமாறு கூறிய நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகாலட்சுமியை சரமாறியாக தாக்கியிருக்கிறார். இதனைக் கண்ட சிந்துஜா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது உதவிக்காக ஓடிவந்தனர். இதனைத் தொடர்ந்து பயந்த நாகராஜ், மகாலட்சுமியின் வீட்டில் உள்ள சமையலறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மகாலட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கதவை பூட்டி மறைந்திருந்த நாகராஜன் சரணடையுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து தன்னை காவல் துறையினர் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை திறந்து நெருப்பு பற்ற வைத்திருக்கிறார் நாகராஜ். இதில் அவரது உடல் முழுவதும் நெருப்பு பரவுவே வலியால் அலறி துடித்துள்ளார். இதனையடுத்து கதவை உடைத்து சென்ற காவல்துறையினர் தீக்காயத்தால் அலறி துடித்த நாகராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!