மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நாளில் 2.26 லட்சம் அபராதம் வசூல்... மாஸ்க் அணியாமல் சென்ற மக்களிடம் போலீசார் அதிரடி.!
தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான், டெல்டா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியையும் போட்டு கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகின்றது.
தலைநகரான சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று மாஸ்க் அணியாமல் சென்ற மக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 1082 பேரிடம் 2.26 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. போலிசாரின் இந்த அதிரடி செயலாமல் மக்கள் மாஸ்க் அணிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.