மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பான தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது திருட்டு வழக்கு..! பாஜக பிரமுகர் போலீஸில் புகார்..
உதயநிதி ஸ்டாலின் செங்கலை திருடிவிட்டதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் திமுக சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தினமும் மக்களை சந்தித்து தீவிர தேத்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் செங்கல் ஒன்றை எடுத்து காண்பித்து பேசிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை தான் இங்கே கொண்டுவந்திருப்பதாக கூறி செங்கல் ஒன்றை எடுத்து காண்பித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு இதுவரை வராமல் அடிக்கல் நாட்டப்பட்ட அளவிலேயே உள்ளத்தையும், அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று வருடம் ஆகியும் மருத்துவமனை பணிகள் தொடங்காமல் இருப்பதையும் மக்கள் உணரும் வண்ணம், எளிதாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உதயநிதி இந்த முறையை கையாண்டார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து செங்கல்லைத் திருடி வந்துவிட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான நீதிப்பாண்டியன் என்பவர் ஆன்லைன் மூலம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ள புகாரில், "எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்ட இருக்கும் இடத்தை சுற்றி 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காக கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து திமுக கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைத் திருடிக்கொண்டு வந்துள்ளார்.
தான் திருடி வந்த செங்கலை விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காண்பித்து அவரே அந்த திருட்டை ஒப்புக்கொண்டார். எனவே இந்திய தண்டனை சட்டப்படி செங்கல்லைத் திருடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.