குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கள்ளக்குறிச்சி 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம்.! சென்னை கோயம்பேட்டில் பத்திரமாக மீட்பு.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் இருவரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள், சக மாணவிகளுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குறித்த மாணவிகள் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளை கண்டுபிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாயமான மாணவிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவிகளை பத்திரமாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.