திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியிடம் காதலிப்பதாக நடித்து அத்துமீறல்.. கருக்கலைப்பு செய்து சிக்கிக் கொண்ட காதலன்..! நெஞ்சை பதற வைக்கும் துயரம்..!!
சிறுமிக்கு 18 வயது ஆகிவிட்டது என கருக்கலைப்பு செய்த காதலர்கள் தப்பி ஓடிவிட காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமி. இவர் பெரியம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவரது பெற்றோர்கள் இறந்து விட்டனர். சிறுமி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயிலில் தனியார் அட்டை கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில், அவருடன் வேலை பார்த்து வந்த சதீஷ் என்று இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது இருவருக்குள்ளும் காதலாக மாறிய நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, நன்னிமங்கலம் கிராம சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுமிக்கு 16 வயது என்று கூறினால் சதிஷ் சிறை செல்ல வேண்டும் என்று நினைத்து, அவருக்கு வயது 18 ஆகிறது என்று சொல்லி கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த விஷயம் இறுதியாக லால்குடி காவல்துறையினருக்கு தெரியவரவே, அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரிப்பதற்குள் சிறுமி மற்றும் ஜோதி அவரின் காதலன் சதீஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.