மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மரணம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அருகாமையில் புல்வயல் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல்லா. இவரது மகன் முகமது ஆசாத் (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது கிணற்றில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த முகமது ஆசாத் மேலிருந்து கிணற்றில் குதித்த நிலையில், தண்ணீரில் குதித்த சிறிது நேரத்தில், உள்ளே மூழ்கி மேலே வராமல் இருந்துள்ளார்.
இதனால் பயந்து போன அவரது நண்பர்கள் என்ன செய்வதென்று அறியாமல் உடனடியாக சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முகமது ஆசாத்தின் உடலை கைப்பற்றினர்.
அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், முகமது ஆசாத் கிணற்றில் குதித்ததை அவரது நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதில் முகமது ஆசாத் தண்ணீரில் குதிக்கும் காட்சிகளும், பின் அவரை மேலே வரமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே சென்றதும் தெரியவந்துள்ளது.
பின் இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் மிகவும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ரம்ஜான் பண்டிகைக்காக ஊருக்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.