திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே.. கை, கால்கள் கட்டப்பட்டு இரவு காவலருக்கு நேர்ந்த சோகம்..! பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..!!
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரவு காவலர் தூக்கில் தொங்கவிடப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டையை சார்ந்தவர் பரமசிவம். இவர் கடந்த 2 வருடமாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்றிரவு வழக்கம்போல் பணிக்கு சென்றவர், இன்று அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பரமசிவத்தின் இழப்பை அறிந்த அவரின் உறவினர்கள் ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.