கார் ஏற்றி காவலர் கொலை!,. அதே இடத்தில் பற்றி எரிந்த கார்!.. கொலையாளி குறித்து பகீர் தகவல்..!



police man killed by collided car by his brother in law

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகேயுள்ள வடக்கு செய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் காமேஷ் குமார் (37). இவர் சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக காமேஷ் குமாருக்கும் அவர் அக்காவின் கணவர் மதன் பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று காலை 11 மணியளவில், செய்யூரில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட்ட காமேஷ் குமார், டூ-வீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது போது செய்யூர் சால்ட் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு நண்பருடன் செஃபோனில் பேசியுள்ளார்.

அதே நேரத்தில், சால்ட் காலனியில் இருந்து மதன் பிரபு அவரது நண்பர்களுடன் காரில் செய்யூர் நோக்கி வந்துள்ளார். அங்கே சாலையோரம் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த காமேஷ் குமாரை கண்ட மதன் பிரபு, காரை அவர் மீது ஏற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் டூ-வீலரின் மீது மோதிய வேகத்தில் முன்பகுதி சிதலமடைந்து பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் தீப்பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து காரை இயக்க முடியாததால் காரை அங்கியே நிறுத்திய மதன் பிரபு, தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செய்யூர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து  தீயை அணைத்தனர். மேலும் காமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்யப்பட்ட காமேஷ் குமாரின் மனைவி ரேகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மதன் பிரபு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.