மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய விவகாரம்!. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அதிரடி கைது..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் காந்தி சிலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல பேருந்துக்காக இந்த நிழற்குடையில் காத்திருப்பது வழக்கம்.
இந்த நிலையில், அந்த நிழற்குடையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டியுள்ளார். இந்த காட்சி தற்பொழுது வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சிகளின் அடிப்படையில், சிதம்பரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் இருவரும் சிதம்பரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அந்த மாணவி சிதம்பரம் அருகேயுள்ள வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், மாணவர் வடகரிராஜபுறம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர் மற்றும் மாணவியை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி ரம்யா தலைமையிலான குழுவினர் மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து முகநூலில் பகிர்ந்த சிதம்பரத்தை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.