நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அதிவேகத்தில் பறந்த தனியார் பேருந்து.. நின்ற அரசு பேருந்தில் மோதி பயங்கர விபத்து.. 10 பேருக்கு சோகம்.!
புதுச்சேரி மாநிலத்திற்கு சொந்தமான அரசு பேருந்து, நேற்று மதியம் புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி நோக்கி பயணம் செய்தது. இடையில், பேருந்து பூரணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை மேலும் ஏற்றிக்கொண்டு இருந்தது.
அப்போது, கடலூர் நகரில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, நின்று கொண்டு இருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நொடியில் நடந்த கோர விபத்தில், தனியார் பேருந்தின் முன்புறம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விஷயம் தொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.