மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணம் - தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.!
தமிழர்களின் திருநாளாக போற்றப்படும் பொங்கல் பண்டிகை 2024-ஐ, உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்னும் சில நாட்களில் வரவேற்க இருக்கின்றனர். இதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நியாயவிலை அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுதான் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசாக சர்க்கரை, பச்சரிசி, கரும்பு உட்பட பரிசுப்பொருட்கள் தொகுப்புடன், ரூ.1000 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை ரொக்கமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, அதன் பேரில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.