பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு : இன்று தொடங்குகிறது ரயில் முன்பதிவு..! மறந்துடாதீங்க..!!
ஜனவரி 2023, 15-ஆம் தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செல்வார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில் முன்பதிவு செப்டம்பர் 12-ம் தேதியான இன்று தொடங்குகிறது.
பொங்கல் தொடங்கும் 120 நாட்களுக்கு முன்னதாகவே ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதன்படி பொங்கல் பண்டிகையின் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பயணிக்க விரும்பும் பயணிகளும் இன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளையும், ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வரும் 14-ஆம் தேதியும், ஜனவரி 13-ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ஆம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையங்களில் தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும். இதன்படி பொங்கல் பண்டிகைக்கு பயணிப்பவர்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.