மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த 5 நாளில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்க்கான டோக்கனை பெற்று கொள்ளலாம்... அதிரடி அறிவிப்பு!!
2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் பெறுவதற்கான டோக்கனை இந்த ஆண்டு இறுதியில் இருந்து வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் சக்ரபாணி ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது எப்போது என்பது தொடர்பாக பேசியுள்ளனர்.
அதன்படி பொங்கல் திருநாளையொட்டி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வருகின்ற டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய 5 நாட்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த 5 நாளில் குடும்ப அட்டைத்தாரர்கள் பொங்கல் பரிசு டோக்கனை பெற்று கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.