மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வருடம் ரூ 1000 கிடையாதா... பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு... என்னென்ன பொருட்கள் தெரியுமா.?
கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகையாக ரூ 1000 ம் அதனுடன் பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவிக்காமல் இருந்ததால் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் ரூ 1000 குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆனால் எந்தவித அறிவிப்பும் அறிக்கையில் வெளியாகவில்லை. ஆனால் நாளைய தினம் ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.