பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருமணமான 9 மாதத்தில் தீக்குளித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் ! நீதிபதியிடம் அளித்த பகீர் மரணவாக்குமூலம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஓணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் வினிதா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
வினிதாவிற்கு திருமணத்தின் போது அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் நகை,சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் ராஜன் கார் வேண்டும் என கேட்டநிலையில் அவருக்கு வினிதாவின் பெற்றோர் ரூ .1.50 லட்சம் பணத்தை கையில் கொடுத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர்கள் வினிதாவிடம் கேட்டுள்ளனர்.அவர் இதுகுறித்து அவரது தந்தையிடம் கேட்ட நிலையில் அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் ராஜன் மற்றும் அவரது பெற்றோர்கள் பைக் வாங்கி வா இல்லையெனில் பணம் வாங்கி வா என கூறி அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். வினிதா தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நேற்று இதுகுறித்து கணவன்-மனைவிக்கிடையே நள்ளிரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினிதா உயிரிழந்தார். இந்நிலையில் இறக்கும் தருவாயில், நீதிபதியிடம் வினிதா அளித்த வாக்குமூலத்தில், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். அதனால்தான் தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீஸார் ராஜனின் குடும்பத்தாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.