மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபாய சங்கிலியில் பிரச்சினையா?? கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்.! ரயில்வே விளக்கம்!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீழிதநல்லூர் கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் 25 வயது நிறைந்த சுரேஷ்குமார். இவருக்கு சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கஸ்தூரி 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
ரயிலில் இருந்து விழுந்த கர்ப்பிணி
இந்த நிலையில் அவர்கள் மேலநீழிதநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், கஸ்தூரிக்கு வளைகாப்பு விழா நடத்தவும் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2ஆம் தேதி ஊருக்கு சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென வாந்தி வந்த நிலையில் கஸ்தூரி கை கழுவும் இடத்திற்கு சென்று காற்றோட்டமாக நின்றுள்ளார். அப்பொழுது நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். உடனே உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நிற்காமல் சென்றுள்ளது.
நிற்காமல் சென்ற ரயில்
அதைத் தொடர்ந்து அவர்கள் அடுத்த பெட்டிக்கு ஓடி சென்று அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.இந்நிலையில் கஸ்தூரி விழுந்த இடத்திலிருந்து 8 கிமீ தூரம் தள்ளிச் சென்று ரயில் நின்றுள்ளது. பின்னர் அவரது உறவினர்கள் திரும்பி வந்து தேடிய போது உளுந்தூர்பேட்டை அருகே கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபாய சங்கிலி வேலை செய்து ரயில் நின்றிருந்தால் கஸ்தூரியை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரயில்வே விளக்கம்
இந்நிலையில் இதுக்குறித்து விசாரணைக்கு பிறகு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் அபாய சங்கிலியில் எந்த பிரச்சினையும் இல்லை. எஸ் 9 பெட்டி உட்பட ரயிலில் இருந்த 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாகவே இயங்கியுள்ளது. அபாய சங்கிலியை முறையாக அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரயில் நின்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.