படாரென பேருந்து கட்டணத்தை உயர்த்திய தனியார் பேருந்துகள்! அதிர்ச்சியில் பயணிகள்!!



Private Bus increase their Ticket Rate

மிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் வரும் காரணத்தினால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால், தமிழக அரசும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் 30 சதவீதம் விலை உயர்ந்தபட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தனியார் ஏசி பேருந்துக்கு ரூபாய் 3000மும் சாதாரண பேருந்து என்றால் ரூ. 1400 வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ஏசி பேருந்துக்கு 2450 ரூபாய்க்கும், சாதாரண பேருந்துக்கு 1400 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஏசி பேருந்துக்கு ரூபாய் 2000, சாதாரண பேருந்துக்கு 1200 வரை வசூலிக்கப்படுகிறது.

இதனால் விடுமுறையில் ஜாலியாக  ஊருக்கு செல்ல இருந்த பயணிகள் டிக்கெட்டின் விலைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.