திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்.. மீண்டும் டாப்பில் நின்று சாதனை..! கவலைக்கிடமாகும் எதிர்காலம்.!!
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி நிறைவுபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியான இன்று காலை 10 மணியளவில் வெளியாகின. இந்த தேர்வு முடிவுகள் படி பெரம்பலூர் மாவட்டம் 97.67% விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
அதனை அடுத்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொருத்தமட்டில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 10% அதிகரித்துள்ளது.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45% என்று இருக்கும் நிலையில் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.38% உள்ளன. இதன் மூலமாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் மீண்டும் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.