அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ப்ளீஸ்... எங்களை இனிமே அப்படி கூப்பிடாதீங்க... இணைப்பிரியா தோழிகள் எடுத்த விபரீத முடிவு... போலீசார் விசாரணை!!
சென்னையில் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள விடுதியில் மதுரை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரண்டு மாணவிகளும் இணைப்பிரியா தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் இணைப்பிரியா நட்பினை பார்த்த சக மாணவிகள் இவர்களை கிண்டலாக லெஸ்பியன் என அழைத்து வந்துள்ளனர். சக மாணவிகள் தான் அப்படி என்றால் பேராசிரியரும் தோழிகளை பார்த்து லெஸ்பியன் என அழைத்து வந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இரு தோழிகளும் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்த மெர்குரி சல்பைடு வேதிப்பொருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் நேரில் சென்று விடுதியில் சக மாணவிகளிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.