மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த குழந்தையின் சடலத்தை கவ்வி வந்த நாய்.. பதறவைக்கும் தகவல்... புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி..!
பிறந்து சில தினங்களேயான ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று கவ்வி இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகாமையில் சின்னான்கோன் விடுதி பெரியார் சமத்துவபுரம் குடியிருப்பிற்கு பின்புறமாக பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தையின் சடலத்தை ஒன்றை கவ்வி வந்துள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து நாயை விரட்டி விட்டு குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஒடப்பவிடுதி கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி இதுகுறித்து ரெகுநாதபுரம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தையின் சடலம் அங்கு எவ்வாறு வந்தது? என்றும், யாரேனும் குழந்தையை வீசி சென்றார்களா? எனவும் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.