நிலத்தகராறில் ஆசிரியைக்கு வகுப்பறையிலேயே கன்னத்தில் பளார் விட்ட குடிகார ஆசாமி : பரபரப்பு சம்பவத்தால் பேரதிர்ச்சி.!



Pudukkottai Alangudi Man Slap Teacher at Class Room

ஊருக்குள் நடந்த நிலச்சண்டைக்கு வகுப்பறைக்குள் போதையில் வந்து ஆசிரியையின் கன்னத்தை குடிகார ஆசாமி பதம்பார்த்து சென்ற பயங்கரம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, மாருதி நகரில் வசித்து வருபவர் சித்ராதேவி. இவர் ஆலங்குடி கன்னியான்கொல்லை அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் வழக்கம்போல வகுப்பறையில் மாணவ - மாணவியருக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த நபரொருவர் போதையில் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துகொள்ள, போதை ஆசாமி ஆசிரியை சித்ராதேவியின் கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ந்துபோன பிற ஆசிரியைகள் பொதுமக்கள் உதவியுடன் அவரை வெளியேற்றியுள்ளனர். பின்னர், இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் வாணக்கன்காடு கிராமத்தை சேர்ந்த சித்திரைவேல் என்பது உறுதியானது. 

விசாரணையில், ஆசிரியை சித்ராதேவிக்கும் - சித்திரைவேலுக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறான தருணத்தில், நிலப்பிரச்சனையில் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சித்திரைவேல் மதுபானம் அருந்திவிட்டு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கி இருக்கிறார் என்பது உறுதியானது.