திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எல்லை தாண்டி வந்ததாக 4 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேர், தங்களின் மீன்பிடி படகில் இன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படை, இவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றசாட்டு முன்வைத்துள்ளது.
கைதான 4 பேரின் விபரங்கள் இதோ
மேலும், எல்லைதாண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்வதாகவும் அறிவித்து, 4 மீனவர்களையும் கைது செய்துள்ளது. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையால் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜோதிடத்தை நம்பி பிறந்து 38 நாட்கள் ஆன பேரனை கொன்ற தாத்தா; அரியலூரில் நடுங்கவைக்கும் சம்பவம்.!
முதற்கட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (32), சாரதி (23), முரளி (42), ராமதாஸ் (52) ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!