திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவசர ஊர்தியிலேயே பிரசவம்; தாய் - சேய் நலம்.. மருத்துவ பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி விசித்ரா. நிறைமாத கர்ப்பிணியான விசித்ராவுக்கு, இன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குடும்பத்தினர் அவசர உதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் 108 அவசரஊர்தி அதிகாரிகள் விரைந்து வந்து விசித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது வழியிலேயே அவருக்கு பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமுடன் இருக்கும் நிலையில், இருவரும் முதலுதவி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவசர ஊர்தியிலேயே குழந்தை பிறந்தாலும், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவ பணியாளர்கள் மஞ்சுளா மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.