புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ தலையிட தடை! மாவட்ட ஆட்சியர் அதிரடி!



pudukottai-collector-new-announcement

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் செயல்பட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி கூறுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சிமன்ற அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பயன்படுத்தி சுந்திரமாகவும், சிறப்பாகவும் செயல்பட அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ செயல்பட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்களிலோ, ஊராட்சிமன்றக் கூட்டங்கள் மற்றும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்புடைய பெண் ஊராட்சிமன்றத் தலைவருக்கு பதிலாக அவரது கணவரோ, நெருங்கிய உறவினர்களோ செயல்படுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

Pidukottai

மேற்காணும் பொருள் அடிப்படையில் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டணமில்லா 1800-425-9013  என்ற தொலைபேசி எண்ணிலோ மற்றும் 04322-222171 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை தமிழக மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். மேலும் இதே போன்று அணைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.