மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவன் மீது ஜாதிய பார்வை, தாக்குதல்.. மனஉளைச்சலால் சிறுவன் தற்கொலை..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணுகுமார். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவன் விஷ்ணுகுமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என கூறப்படும் நிலையில், அவர் படித்த பள்ளியில் ஜாதிய அணுகுமுறையால் இருந்ததாக தெரியவருகிறது.
இதனால் அவருடன் பயிலும் மாணவர்கள், விஷ்ணுகுமாரை பிற சமூக பெண்களுடன் பேசக்கூடாது என அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளனர். சகோதரத்துவத்துடன் பேசி வந்த சிறுவனை அவ்வப்போது தாக்கியதாகவும் தெரியவருகிறது.
இதனால் சிறுவன் மனஉளைச்சலில் தவித்து வந்துள்ளார். 10ம் வகுப்பு படித்த சமயத்தில் இருந்து, சிறுவனுக்கு இவ்வாறான கொடுமை தொடர்ந்து வந்த நிலையில், மனஉளைச்சலில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.