மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: பள்ளி மாணவர்கள் மனதில் சாதீ வெறி: தூக்கில் தொங்கிய தலித் இளைஞர்.. புதுக்கோட்டையில் சோகம்.! நடந்தது என்ன?..!
தன்னுடன் பயின்று வந்த மாணவியுடன் நட்பாக பேசிய இளைஞரின் சமுதாயத்தை காரணம் காட்டி, அவரை தொடர்ந்து அவமதித்து தாக்கி வந்ததால், ஒரு கட்டத்தில் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். பள்ளிக்கு சென்றுவந்தபோது மகனுக்கு நடந்தது என்ன? என்பது தெரியாமல் பெற்றோர் விழிபிதுங்கி கதறிய பெற்றோரின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, கொப்பம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வீரமுத்து. இவரின் மனைவி உமா. தம்பதிகளுக்கு விஷ்ணுகுமார் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
அங்குள்ள மற்றொரு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற நிலையில், 11ம் வகுப்பு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பில் தன்னுடன் பயின்ற மாணவியிடம் நட்பு ரீதியாக பேசி வந்துள்ளார்.
விஷ்ணுகுமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என கூறப்படும் நிலையில், அவர் மாற்றுசமூக பெண்ணிடம் பேசக்கூடாது என சில மாணவர்கள் தகராறு செய்துள்ளனர்.
பேருந்து நிலையம், பள்ளி வளாகம் என விஷ்ணுகுமாரை ஜாதியாக ரீதியாக தாக்கியுள்ளனர். கீரனூர் பள்ளிக்கு மாணவர் மாறிவிட, அவரின் தோழி அப்பள்ளியிலேயே பயின்று வந்துள்ளார்.
இதனிடையே, மாணவர்களுக்கு இடையேயான ஜாதிய தீண்டாமை கொடுமை தொடர்ந்து வந்துள்ளது. சம்பவத்தன்று விஷ்ணுவின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நிகழ்விடத்தில் இருந்த காவலர்கள், மாணவர்களை விலக்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
மனவருத்தத்தில் வீட்டிற்கு சென்ற சிறுவன் விஷ்ணுகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகனின் உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.
சாதிய கொடுமை காரணமாகவே தனது மகன் உயிரிழந்ததாக அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.