பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Video: டேய்.. அவ்ளோதான் நீ.. வாரியா பார்த்துக்கலாம்.. **ல..! அறிவுரை கூறிய ஓட்டுநர் மீது தாக்குதல்., ஆபாச வசைபாடல்.!
தன்னை கண்டித்த அரசு பேருந்து ஓட்டுனரை அடிக்க பாய்ந்த மாணவன், அவனுக்கு ஆதரவாக வந்தவர்கள் செய்த ரகளை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அரசு பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை ஓட்டுநர் கண்டித்த நிலையில், அவரை ஒருதரப்பு மாணவர்கள் தங்களின் ஆதரவு நபருடன் அடிக்கபாயந்து, ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கும்பகோணம் அருகே நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.
வீடியோவின் அடிப்படையில் மாணவர்களை கண்டித்து, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஒருவர் தனது உயிர் பாதுகாப்பிற்கு அறிவுரை கூறி கண்டிக்கிறார் என்ற யோசனை செய்யும் அளவு கூட சிந்திக்க இயலாமல் இளம் தலைமுறை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது பலருக்கும் வேதனையை அளித்துள்ளது.