மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 84 வயது முதியவர்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு 2019ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் கவாரக்கார தெருவை சேர்ந்தவர் ராமு. 84 வயது நிரம்பிய இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு 2019ம் ஆண்டு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்தனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.