மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
கடந்த 2019 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற முதியவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றம்சாட்டப்பட்ட முதியவர் சுந்தராஜுக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.