மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குன்னூரில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்... ஆசையாக சிக்கன் பப்ஸ் வாங்கிய நபர் கண்ட அதிர்ச்சி காட்சி!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு பணி முடித்து விட்டு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் உணவகத்தில் 4 சிக்கன் பப்ஸ்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து பப்ஸ்களை சாப்பிட்டுள்ளார் விஜயகுமார். 4 வது பப்ஸை அவரது மகன் எடுத்து சாப்பிடும் போது அதில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனே தனது குடும்பத்தினருடன் குன்னூர் அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் கடைக்கு கீழ் வைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.