மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்தலில் வெற்றி யாருக்கு கிடைத்தது? - புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.!
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்று முடிந்தது. இதனால் தேர்தல் முடிவுகளுக்கான அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. சட்டப்பேரவையை அலங்கரித்த திமுக, உள்ளாட்சியிலும் இடம்பெற தீவிர களப்பணியாற்றிய நிலையில், உள்ளாட்சியிலாவது முழு வெற்றியை அடைய வேண்டும் என அதிமுகவும் செயல்பட்டு வந்தது.
தமிழகத்தில் தேர்தல்களில் வெற்றி பெறுவது ஜனநாயகம் அல்ல. மிதஞ்சிய ஊழலும், அதிகார துஷ்பிரயோகம், பொய்யும் புரட்டும் தான் இதை மக்கள் உணர வேண்டும்.
— Puthiya Tamilagam (@PTpartyOfficial) February 20, 2022
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமிhttps://t.co/1nInMDfu2f
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பதிவு செய்துள்ள ட்விட்டில், "தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது ஜனநாயகம் கிடையாது. மிதமிஞ்சிய ஊழல் மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம், பொய்கள் போன்றவையே வெற்றி பெற்றுள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.