மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களின் பசியாற்றும் அம்மா உணவகத்திற்கு ₹50 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்..!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே3 ஆம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடும்பத்தை விட்டு வெளியூரில் தொழில் மற்றும் வேலை செய்வோர், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் ஒட்டலில் சாப்பிட வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் தற்போது நிலவி வரும் ஊரடங்கால் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்ட தமிழக முதல்வர் அனைத்து அம்மா உணவகங்களும் இயங்கும் என்ற அறிவிப்பால் அம்மா உணவகங்கள் மட்டும் இயங்கி வருகின்றன.
மேலும் ஒரு சில அம்மா உணவகத்தில் இலவசமாகவே உணவுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் அளித்துள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை பாராட்டி மாநகராட்சி சார்பில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.