மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அதிகாலை முதல் வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலி.. புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
இன்று 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டி நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும், அதன் பலனாக தமிழகத்தின் பலபல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மற்றும் அதற்கு முன்பு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில், தற்போது அதிகாலை முதலாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை தொடருவதால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை என்றும், இதனை ஈடு செய்ய சனிக்கிழமையில் பள்ளி, கல்லூரிகள் நடைபெறும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.