பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இடிமின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 17ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.
நகரின் ஒரு சிலபகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும். அதிகபட்ச வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 27 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.