#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 மாவட்டங்களில் வருகைபுரிய காத்திருக்கும் கனமழை!!
இன்று 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை அறிவிப்பு.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஒருசில இடங்களில் கனமழை முதல், மிதமான மழை வரை அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.
இதனால், ஒருசில இடங்களில் பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையின் வருகையானது குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், கன்னியாகுமாரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.