மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனமழை எதிரொலி: இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, 1 மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது தொடர் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை தொடர்ந்ததையடுத்து, நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், இன்று மதுரை, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.