தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரயில்பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்தது ரயில்வேத்துறை!. ஆனாலும் அதிருப்தியில் பயணிகள்!.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து, நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில் செப்டம்பர் 12-ந் தேதி இரவு 10.15 மணிக்கு இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில் என்பதால் இந்த ரெயில்களில் வழக்கமான கட்டணத்தை விட அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இந்த ரயிலில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் படியில் தொங்கி செல்லும் அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுவருகிறது. ரயில் பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை வைக்கும் நிலையில் இந்த நிலையில் இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது என கூறுவது பயணிகளுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது. அந்த சிறப்பு ரயிலுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது.