நடுக்கடலில் பாம்பன் மீனவர்களை தாக்கிய சூறாவளி; 5 பேரின் நிலை என்ன?.. சோகத்தில் உறவினர்கள்.!



Ramanathapuram Pampan Fishermans Struggle in Mid Sea 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 5 பேர், தங்களின் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். 

கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவில் நாட்டுப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்களின் படகை சூறாவளி ஒன்று தாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: #JustIN: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; அருவிகளில் குளிக்க தடை.!

குடும்பத்தினர், உறவினர்கள் கவலை

இந்த சம்பவத்தில் படகு கவிழ்ந்த நிலையில், மீனவர்களும் நடுக்கடலில் விழுந்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். 

இவர்கள் அனைவரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: #Breaking: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!