மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையால், இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு.!
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதஸ்வாமி கோவிலும் ஒன்றாக உள்ளது. இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதஸ்வாமி கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், கடந்த 5 வருடத்திற்கும் மேலாக கோவிலின் நான்கு பகுதியிலும் 24 மணிநேர காவல்துறை கண்காணிப்பு உள்ளது.
இந்த நிலையில், உளவுத்துறை சார்பில் இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இராமேஸ்வரம் மற்றும் கோவில் பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு வாசலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
கோவிலின் அனைத்து பிரகார பகுதியிலும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் கோவிலின் மேல் பகுதி மற்றும் ரதவீதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சி.சி.டி.வி கேமிராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.