திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளத்தன மதுவில் போதை மாத்திரை கலந்து கரைதிரும்பும் மீனவர்களுக்கு விற்பனை; இளைஞர் கைது.. பரபரப்பு தகவல்.!
கரைக்கு திரும்பும் மீனவர்களுக்கு போதை மாத்திரை கலந்து மதுபானம் விற்பனை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேரான்கோட்டை கடற்கரையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில், காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், காலை நேரத்தில் கரைக்கு திரும்பும் மீனவர்களுக்கு கள்ளத்தனமாக்க மதுபானம் விற்பனை செய்வது அம்பலமானது.
நிகழ்விடத்தில், கரையூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் குமரகுரு இருசக்கர வாகனத்தில் 50 மதுபானத்தை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் மதுபானத்தை துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சோதனையில் கள்ளத்தனமான மதுவில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்யப்படுவது அம்பலமாகவே, குமரகுருவை கைது செய்த அதிகாரிகள் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். அவரின் மீது பல்வேறு வழக்குகளும் இருந்துள்ளன.