மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: ரௌடி தலை துண்டிக்கப்பட்டு கொலை; விவசாய நிலத்தில் உடல்வீச்சு.. இராமநாதபுரத்தில் பயங்கரம்..!
வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற ரவுடி மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, செங்கமடை கிராமத்தின் வயல்காட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு ஆணின் சடலம் கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் திருவாடானை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ரௌடியாக வலம்வந்த இவனின் மீது சுற்றுவட்டார காவல் நிலையத்தில் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரை நேற்று இரவு முதலாக காணவில்லை.
இதுகுறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தங்களுக்கு தெரிந்த பல இடங்களில் முத்துபாண்டியை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை அதிகாரிகள் பார்த்தபோது, அது முத்துபாண்டியின் உடல் என்பது உறுதியானது. தலையும் உடலும் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து, முத்துபாண்டியின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.