அப்படிப்போடு.. இனி பாம்பன் பாலத்தின் அழகை காரை நிறுத்தி ரசிக்க முடியாது; விபரம் உள்ளே.!



Rameswaram Pamban Bridge CCTV Camera Watching 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் பிரதான இரயில் மற்றும் சாலை போக்குவரத்து மேம்பாலம், கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாம்பன் பாலம் மிகவும் பிரபலமானது ஆகும். 

வெளியூர்களில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள், தங்களின் வாகனங்களான கார் மற்றும் பேருந்து ஆகியவற்றில் வந்து, பாலத்தின் நடுவே நின்று அதனை சுற்றிப்பார்ப்பது வழக்கம். இதனை கட்டுப்படுத்த காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்நிலையில், தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ள காவல் துறையினர், பாம்பன் பாலங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி இருக்கின்றனர். இதனால் பாலத்தின் நடுவழியில் சுற்றுலாப்பயணிகள் தங்களின் கார் உட்பட எந்த வாகனத்தில் இருந்து இறங்க கொடுத்து. 

விதியை மீறி அவர்கள் காரில் இருந்து இறங்கினால் அல்லது காரின் கதவை திறந்தால், அவர்களின் கார் பதிவெண் தானியங்கு முறையில் சேகரிக்கப்பட்டு ரூ.1000 விதிக்கப்பட்டதற்கான அபராத தொகை ஆன்லைன் வசூலிக்கும் வகையில் கார் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். 

இந்த நடைமுறை அமலில் வருவதால், சுற்றுலாவுக்காக ராமேஸ்வரம் வரும் பயணிகள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.