மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் - மனைவி சண்டையில் விஷம் குடித்து 7 மாத கர்ப்பிணி தற்கொலை.. சிசுவும் உயிரிழந்த பரிதாபம்.!
குடும்பத்தகராறில் 7 மாத கர்ப்பிணி பெண்மணி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது. பெண்ணின் வயிற்றில் இருந்த கருவும் தாயுடன் சேர்ந்தே இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகனா (வயது 23). இதே பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. மூர்த்தி இராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், தற்போது மோகனா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மூர்த்தி - அவரின் மனைவி இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த மோகனா, வீட்டில் இருந்த எலிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். இதனைக்கண்ட உறவினர்கள் மோகனாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் மோகனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மோகனா மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என கூறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆவதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.