மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறையாக எரிக்கப்பட்ட சடலம் தண்டவாளத்தில் வீச்சு.. நடந்தது என்ன?.. இராணிப்பேட்டையில் பகீர் சம்பவம்.!
செக்யூரிட்டியை அடித்து கொலை செய்து, சடலத்தை அரைகுறையாக எரித்து தண்டவாளத்தில் வீசிய பயங்கரம் நெமிலி அருகே நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, திருமால்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருந்துள்ளது. இந்த சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெமிலி காவல் துறையினர், பிரேதத்தை கைப்பற்றினர். மேலும், தண்டவாளம் அருகே சடலம் இருந்ததால் செங்கல்பட்டு இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், செங்கல்பட்டு இரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்கையில், உயிரிழந்தவருக்கு 50 வயது இருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும், உடல் அரைகுறையாக எரிக்கப்பட்டு, காயமும் இருந்துள்ளன. அவர் அணிந்திருந்த இடுப்பு பெல்ட் செக்யூரிட்டி என்பதை உறுதி செய்தது. இதனால் அவர் தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாயற்றலாம் என்பது தெரியவந்துள்ளது.
இவரை யார்? எதற்காக கொலை செய்தனர்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் சடலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சடலம் மீட்கப்பட்ட இடத்தில் எரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்பதால், வேறு இடத்தில் சடலம் எரிக்கப்பட்டு நெமிலி அருகே கொண்டு வந்து போடப்பட்டதும் தெரியவந்துள்ளது.