திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி - பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன?..!
நமது முன்னோர்கள் நம்மை விட்டு பல மறைந்து சென்றிருந்தாலும், அவர்கள் நமது வாழ்வியலுக்காக பல பழமொழிகளை நம்மிடையே பொன்மொழியாக விட்டுச்சென்றுள்ளார்கள். அவைகளில் சில மட்டுமே இன்று நம்மால் பேசப்படுகிறது. அதிலும், தனிநபரின் இஷ்டத்திற்கேற்ப ஒரு கட்டுக்கதை கட்டவிழ்த்துவிடப்பட்டு, அவைகள் அவதூறான பழமொழியாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு இன்று நாம் காணவிருக்கும் பழமொழியை நீங்கள் அவதூறாக புரிந்து வைத்திருந்தால் சிறிது கவலைகொள்ளுங்கள். இத்தனை நாட்கள் ஒரு நல்ல பழமொழியை தவறாக புரிந்துகொண்டேமே என்று., பெருமளவு கவலை கொள்ளவேண்டியது உங்களிடம் அந்த பழமொழியை தானும் சரியாக புரிந்துகொள்ளாது அதுகுறித்த அவதூறை பகிர்ந்தவர்கள்.
"அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி; தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி" - இந்த பழமொழியின் பொருள் என்ன?. உண்மையான அர்த்தம் என்ன என்பதை இனியாவது தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய நடப்பு வழக்கில் இதன் அர்த்தமே தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது காலத்தினால் அல்ல., புரட்சி பேசி திரைமறைவில் சுய இன்பத்தோடு வாழும் ஒரு வாழாவெட்டி விரோதி செய்த வேலை தான் என்று கூற வேண்டும். இந்த தவறான கருத்து மருவிய பழமொழியாகும். மனிதனின் மனது குரங்கு என்று கூறுவார்கள். ஏனென்றால் நொடிக்குள் பல்வேறு சிந்தனைக்குள் சென்று வந்துவிடும்.
தாய் - தந்தையின் காலங்களுக்கு பின்னர், அன்றைய காலத்தில் அண்ணன் - அண்ணி பெற்றோர்களின் நிலையில் இருந்து குடும்பத்தை கவனித்துக்கொள்வார்கள். இன்றைய காலம் மட்டுமல்லாது அன்றைய காலத்திலும் பணம், சொத்து, பகைமை போன்ற உணர்ச்சிகள் உறவை நாசம் செய்தது.
பல வருடங்களுக்கு முன்னர் வரை கூட்டுக்குடும்பம் என்பது இருந்தது. ஒரே வீட்டில் மாமனார், மாமியார், பாட்டி, தாத்தா, பெரிய மருமகள், சின்ன மருமகள், குழந்தைகள் என குறைந்தது 10 பேர் முதல் 20 க்கும் மேற்பட்டோர் வரை குடும்பமே கிராம வீதி போல இருக்கும். வீட்டின் தலைமை பொறுப்பில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் மாமியார் அனைத்து விஷயத்தையும் பார்த்துக்கொள்வார். பின்னர், வீட்டிற்கு முதல் மருமகள் வந்ததும் அவருக்கு பொறுப்புகள் பரிமாற்றம் செய்யப்படும்.
அந்த பெரிய மருமகள் குழந்தைகள், பெரியவர்கள் என வீட்டு நிர்வாகத்தை கவனித்து பிசியாக இருந்து வருவார். இவர் அன்றாட பணிகளை முடித்துவிட்டு, குழந்தைகளை உறங்க வைத்து, பாத்திரத்தை சுத்தம் செய்து வருவதால் கணவருடன் உறங்க செல்லவே அரை இராத்திரி ஆகிவிடும். இதனால் அண்ணனுக்கு அரை பொண்டாட்டி.
பிற இளைய மருமகளுக்கு பொறுப்புகள் அதிகளவு இருக்காது என்ற காரணத்தாலும், வீடு பழக்க வழக்கம் குறித்து அறிய நேரம் எடுக்கும் என்பதாலும், அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் வரை தம்பியும் - அவரின் மனைவிக்கும் கவலைகள் இல்லாத வாழ்க்கையை வாழுவார்கள். அதுவே தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி.
கூட்டு குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட பழமொழி, இன்று கலாச்சாரத்தை சீரழிக்க ஒரு பிரதான வார்த்தையாக மாறிப்போனது தான் வேதனையின் உச்சம். தெளிவடைவோம்., முன்னோர்கள் கூற்றுப்படி நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இறைவனடி அடைவோம். நெஞ்சை நிமிர்த்தி உரக்க சொல்லுங்கள் எம்முன்னோர்கள் மூடர்கள் அல்ல.
மேலுள்ள பழமொழியை யாரேனும் முழுவதுமாக உச்சரித்து இருப்பார்களா?. தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்ற ஒரே வாக்கியத்தை வைத்து பலவிதமான கற்பனைகளை கட்டவிழ்த்துவிட்ட உருட்டி இருக்கிறார்கள்.