#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் பரபரப்பு! மசாஜ் செண்டரில் பாலியல் தொழில்; நிர்வாகி அதிரடி கைது.!
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த மசாஜ் செண்டர் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை தி. நகர் துணை ஆணையர் அரவிந்தனுக்கு வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் ஒரு அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், மசாஜ் செண்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக புகார் வந்தது.
அதன் பிறகு அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஐந்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது உண்மை என்று தெரியவந்துள்ளது. மேலாளரிடம் நடைபெற்ற விசாரணையில் கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை அழைத்து மசாஜ் என்கிற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடத்தி வந்தது அம்பலமானது.
அதனை தொடர்ந்து மசாஜ் செண்டரின் மேலாளர் ஜெயந்தியை (42) போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த 5 பெண்களையும் போலீசார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, மசாஜ் செண்டரின் உரிமையாளர் தமிழ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.