மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போய் வா மகனே! நிரந்தரமாக நம்மை விட்டு பிரிந்தான் சுஜித்! உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் இன்று காலை உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். கடந்த 3 நாட்களாக அமைச்சர்கள், அதிகாரிகள், மீட்பு குழுவினர் என பலர் போராடியும் அணைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நேற்று இரவே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனை அடுத்து இடுக்கி மூலம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாகவும் வருவாய் துறை ஆணையர் ராதா கிருஷ்ணன் தெவித்தார். இதனை அடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
உடற்கூறு ஆய்வுகள் முடிந்ததை அடுத்து வீட்டிற்கு கூட கொண்டுசெல்லாமல் மணப்பாறை பாத்திமா புதூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்காக சுஜித்தின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் உறவினர்கள், ஏரளாமான பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியை அடுத்து சுஜித்தின் உடல் சற்றுமுன் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக மீண்டு வா மகனே என ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருந்த நிலையில் இன்று நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டான் சுஜித்.