திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோர விபத்து: பேருந்து மீது லாரி மோதியதில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு...
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது சரக்கு லாரி மோதியதில் நான்கு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்றானது மேல்மருவத்தூர் அருகே வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த சரக்கு லாரி ஒன்று பேருந்து மீது உரசி உள்ளது. அதில் பேருந்தின் படியில் தொங்கியபடி சென்ற 4 கல்லூரி மாணவர்கள் சரக்கு லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார்கள்.
அந்த கோர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 1 மட்டும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.