பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ச்சீ கருமம்... கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க..! ரவுடி பேபி சூர்யா கைது.! கும்மாளம் போட்ட சிக்காவும் சிக்கினார்.!
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் சிக்கந்தர் ஆகிய இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் டிக்டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், ஜி.பி. முத்து, திருச்சி சாதனா உள்ளிட்டோர் என்றே கூறலாம். டிக்டாக் செயலியில் வீடியோ போடுவதே இவர்களது முழுநேர வேலையாக செய்து வந்தனர். டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பிறகு யூடியூப் சேனலை துவங்கி ஆபாசமாக நடிப்பதும் ஆபாசத்தை பேசுவதும் என வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் ரவுடி பேபி சூர்யா வெளியிடும் வீடியோக்கள் மிகவும் முகம் சுளிக்கும் வகையில் அமையும். ரவுடி பேபி சூர்யா, தன்னை விட வயது அதிகமான சிக்கா எனும் சிக்கந்தருடன் சேர்ந்து மது குடிக்கும் ரவுடி பேபி சூர்யா அவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ போடுவார். லைவ் வீடியோவில் இருவரும் சேர்ந்து அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை வெளியிடுவார்கள்.
இதனையடுத்து இவர்களை கைது செய்யுமாறு பலரும் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகிய இருவரும் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.